216
சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே

217
சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே

218
அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே

219
பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
துதிஏர் நினது பதந்தோஎன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே

220
தோன்ற ஞானச் சின்மயமே துஎய சுகமே சுயஞ்சுடரே
ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
ஈன்றான் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே

திருச்சிற்றம்பலம்

 போக் குரையீடு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்