256
கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
புரத்தைக் காட்டு நகையின்எ ரித்தோர்
புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ

257
காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
பாது காக்கும் பரம்உனக் கையனே
தேசம் யாவும் புகழ்தணி காசலச்
செல்வ மேஅருட் சிற்சுக வாரியே

258
ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே

259
கண்ணைக் காட்டி இருமுலை காட்டியோ
கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
பத்திக் காட்டிமுத் திப்஗எருள் ஈதென
விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
வேல னேஉமை யாள்அருள் பாலனே

260
படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே