331
பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ

332
வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ

333
ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ

334
தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
முவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ

335
வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே