381
மணிக்குழை அடர்ந்து மதர்த்தவேற் கண்ணார்
வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
கழலடிக் காக்கநாள் உளதோ
குணிக்கரும் பொருளே குணப்பெருங்குன்றே
குறிகுணங் கடந்ததோர் நெறியே
எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
எந்தையே தணிகைஎம் இறையே

382
இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
இலைநெடு வேற்கணார் அளகச்
சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
திருவடிக் காக்குநாள் உளதோ
மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
வள்ளலே உள்ளகப் பொருளே
மறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
அணிதிருத் தணிகைவாழ் அரைசே

383
அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
அலர்முலை அணங்கனார் அல்குல்
பூரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
பொள்ளாடிக் காக்குநாள் உளதோ
பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
பாலனே வேலுடை யவனே
விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே

384
விளக்குறழ் அணிப்பூண் மேல்அணிந் தோங்கி
விம்முறும் இளமுலை மடவார்
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
அளக்கருங் கருணை வாரியே ஞான
அமுதமே ஆனந்தப் பெருக்கே
கிளக்கரும் பூகழ்கொள் தணிகையம் பொருப்பில்
கிளர்ந்தருள் பூரியூம்என் கிளையே

385
கிளைக்குறும் பிணிக்கோர் உறையூளாம் மடவார்
கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
மெய்அடி யவர்உள விருப்பே
திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயூந் தணிகைத்
தெய்வமே அருட்செழுந் தேனே