386
தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
திறல்விழி மாதரார் பூணர்ப்பாம்
கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
கழல்வழி நடத்தும்நாள் உளதோ
மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
வண்பூனத் தடைந்திட்ட மணியே
வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
மாமலை அமர்ந்தருள் மருந்தே

387
மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
வாணுதல் மங்கையர் இடத்தில்
பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
அருந்திட தருந்த அடியருள் ஓங்கும்
ஆனந்தத் தேறலே அமுதே
இருந்தரு முனிவர் பூகழ்செயூம் தணிகை
இனிதமர்ந் தருளிய இன்பமே

388
இன்பமற் றுறுகண் வினைவழி நிலமாம்
ஏந்திழை யவர்பூழுக் குழியில்
துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
துணையடிக் காக்கும்நாள் உளதோ
அன்பர்முற் றுணர அருள்செயூம் தேவே
அரிஅயன் பணிபெரி யவனே
வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே

389
வாழும்இவ் வூலக வாழ்க்கையை மிகவூம்
வலித்திடும் மங்கையர் தம்பால்
தாமும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
உதவூசீர் அருட்பெருங் குன்றே

திருச்சிற்றம்பலம்

 அன்பிற் பேதுறல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

390
முடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருதவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
குற்றமர்ந் திடுகுணக் குன்றே