466
வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
நலத்தால் உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே

467
இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே

468
சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
இகமே பரத்தும் உனக்கின்றி எத்தே வருக்கும் எமக்கருள
முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே

469
ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே

திருச்சிற்றம்பலம்
 எழுசீர்தொவே அறுசீர் சமுக ஆபா

 செல்வச் சீர்த்தி மாலை
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

470
அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பகே அசுரப் படைமுழுதும்
தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே