491
மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்த஀ அறும்என்பைக்
கறிக்கும் நாயினும் கடைநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே

492
பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே
493
பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்
494
மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
495

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்