501
துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
502
வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்
503
பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு
504
கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்
505
கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி