581
தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்
582
ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்தலையேல்
ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே

583
நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
குலத்தேவர் போற்றும் குணக்குன்றே மேஎங் குலதெய்வமே
புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே

584
அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே

585
வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே