586
நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையக்தே

587
வையக் தேஇடர் மாக்கடல் முழ்கி வருந்துகின்ற
பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே

588
விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வௌ;வினையேன்
பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே

589
உண்டேர்என போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
கண்டோ ர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
பண்டோ ர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
எண்டோ ள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே

590
கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே

திருச்சிற்றம்பலம்

 பெரு விண்ணப்பம் 
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்