721
அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
படிவ மாகும்ப டம்பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ

722
மநிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே

திருச்சிற்றம்பலம்

 எழுத்தறியும் பெருமான் மாலை
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்

723
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழ்ற்காள் ஆக்காதே
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே

724
மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிளிகொள்
பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே

725
நன்நெறிசேர் அன்பர்தமை நாடடிவும் நின்புகழின்
சென்னேறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
முன்அறியேன் பின்அறியேன் முடனேன் கைம்மாறிங்
கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே