781
வரமன் றலினார் சூழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

782
அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
மறங்கொள் எயில்முன் ஗றிரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமாள் பிச்சைப் பெருமானே

783
தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

திருவடிச்சிற்றம்பலம்
 கலித்துறை தொவேமுதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு
எழுசீர்சமுக ஆபா

 திருவடிச் சரண்புகல்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

784
ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

785
ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
ஓங்கி வார்ஒற்றி யூர்இடை அரவும்
ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே