841
எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே

842
சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியைஇன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்ச்நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே

843
உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தௌ;ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே

844
உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே

திருச்சிற்றம்பலம்

 எழுசீர் தொவே, அறுசீர் சமுக ஆபா

 நெஞ்சொடு நெகிழ்தல் 
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

845
சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு வார்அருள் தேன்தருவார்
ஊர்திரு வார்மதி யுந்தரு வார்கதி யுந்தருவார்
ஏர்தரு வார்தரு வார்ஒற்றி யூர்எம் இறைவர்அன்றி
யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும் அங்கும் இயம்புகவே