856
மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே

ஆசிரியத் துறை

857
உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாணுத லார்க்கு ழன்றினை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
கலக மேகனித்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே

திருச்சிற்றம்பலம்

 சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்த
பாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது தொவே ,,சமுக
பதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை ஆபாபதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது
 அறுசீர் தொவே , எண்சீர் சமுக ஆ பா  எழுசீர்
தொவே , அறுசீர் சமுக ஆபா  ஆசிரியத் தாழிசை தொவே
, சமுக 

 அவத்தொழிற் கலைசல் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

858
அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
கணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் டாங்கொலோ அறியேன்
கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே

859
தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந் தவத்தோர்
ஒவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றி யூர்அமர்ந் தருள்செயும் ஒன்றே

860
ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்ற தின்னம்
நன்றுநின் தன்மை நான்அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தௌ;ளிய அமுதத்தின் திரட்டே
மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே