896
குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
குணமென் றேஅதைக் கொண்டருள் பரூலதஇரிவோர்
உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
ஒற்றி யூரிடம் பற்றிய பரூலதஇனிதர்
களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே

897
பணிகொள் மார்பினர் பாகன மொழியான்
பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
தேவர் நாயகர் திங்களம் சடையார்
அணிகொள் ஒற்றியரூஙதஇர் அமர்ந்திடும் தியாகர்
அழகர் அங்கவர் அமைந்துவீற் றிருக்கும்
மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே

திருச்சிற்றம்பலம்
 நிதன ன உருகுகின்ற சமுக 
 பற்றின் திறம் பகர்தல் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

898
வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை முடரை நெஞ்சக்
கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே

899
முவரை அளித்த முதல்வனை முக்கண் முர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே

900
அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா
மிண்டரைப் பின்றாவெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்
குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே