996
தலங்கன் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
வலங்கொ ளும்படி என்னையும் கூட
வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே
997
998
999
1000