1016
வெண்மை சேர்அகங் காரமாம் வீணா 

விடுவி டென்றனை வித்தகம் உணராய் 
தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென் 

தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய் 
அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ 

அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும் 
உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம

--------------------------------------------------------------------------------


 அவலத் தழுங்கல் 
திருவொற்றியூர் 

எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
() அறுசீர் - தொவே , எண்சீர் - சமுக் ஆபா 
1017
ஊதி யம்பெறா ஒதியினேன் மதிபோய் 

உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் 
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே 

வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி 
ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன் 

அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் 
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1018
கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன் 

கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும் 
மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி 

வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில் 
இல்இ கந்தஎன் மீதெனக் கேதான் 

இகலும் கோபமும் இருக்கின்ற தானால் 
தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1019
கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே 

காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன் 
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன் 

செய்வ தென்னைநின் திருவருள் பெறவே 
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி 

ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே 
செய்த வத்திரு மடந்தையர் நடனம் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1020
அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள் 

அன்னை என்பர்கள் அழவலி இல்லாக் 
கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள் 

குற்றம் அன்றது மற்றவள் செயலே 
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே 

துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம் 
செழுது மாதவி மலர்திசை மணக்கத் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே