1046
தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே 

சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே 
ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில் 

ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண் 
நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து 

நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே 
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 பிரசாத விண்ணப்பம் 
திருவொற்றியூர் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1047
பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் 

பதகனேன் படிற்றுரு வகனேன் 
வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே 

வள்ளலே நினைத்தொழல் மறந்து 
நசைஇலா மலம்உண் டோ டுறும் கொடிய 

நாய்என உணவுகொண் டுற்றேன் 
தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
1048
அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் 

அப்பநின் அடியினை காணா 
தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி 

என்னஉண் டுற்றனன் அதனால் 
புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே 

பூதநா யகஎன்றன் உடலம் 
தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
1049
கண்ணினால் உனது கழற்பதம் காணும் 

கருத்தினை மறந்துபாழ் வயிற்றை 
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி 

மலம்பெற வந்தனன் அதனால் 
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே 

இறைவனே நீஅமர்ந் தருளும் 
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே   
1050
நின்முனம் நீல கண்டம்என் றோதும் 

நெறிமறந் துணவுகொண் டந்தோ 
பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் 

புலையனேன் ஆதலால் இன்று 
மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே 

விரிகடல் தானைசூழ் உலகம் 
தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே