1066
யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ 

என்வ சப்படா திருத்தலை உரைத்தேன் 
தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே 

தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம் 
பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப் 

பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே 
ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே   
டீயஉம--------------------------------------------------------------------------------


வழிமொழி விண்ணப்பம் 
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
1067
நீல னேன்கொடும் பொய்யல துரையா 

நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண் 
சால ஆயினும் நின்கழல் அடிக்கே 

சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ 
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல் 

அகில கோடியும் அழிந்திடும் அன்றே 
சீல மேவிய ஒற்றியம் பரனே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே   
1068
கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே 

கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே 
எண்ணுள் உட்படா இன்பமே என்றென் 

றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும் 
மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன் 

மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே 
திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே    
1069
நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன் 

நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண் 
சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ 

தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன் 
வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே 

மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண் 
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே    
1070
இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ 

இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன் 
பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன் 

பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ 
கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய் 

காள கண்டனே கங்கைநா யகனே 
திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே