1076
சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும் 

சீல மென்பதுன் திருமொழி அன்றே 
வறிய னேன்பிழை யாவையும் உனது 

மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ 
இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை 

ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும் 
செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


 சிறுமை விண்ணப்பம் 
திருவொற்றியூர் 

எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
() எண்சீர் - தொவே, சமுக, ஆபர் எழுசீர் - தொவே, 
1077
இன்று நின்றவர் நாளைநின் றிலரே 

என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச் 
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
நன்று நின்துணை நாடக மலர்த்தாள் 

நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ 
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே    
1078
மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் 

மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச் 
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா 

வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே 
பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே    
1079
உய்ய வல்லனேல் உன்திரு அருளாம் 

உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல் 
செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம் 

பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன் 
பொய்யி தல்லஎம் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே   
1080
வெல்லு கின்றனர் வினைப்புல வேடர் 

மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம் 
செல்லு கின்றன ஐயவோ சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும் 

தூர நின்றனை ஈரமில் லார்போல் 
புல்லு கின்றசீர் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே