1096
வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் 

வள்ளலே வலிந்தெனை ஆளும் 
தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் 

சழக்குடைத் தமியன்நீ நின்ற 
திகைஎது என்றால் சொலஅறி யாது 

திகைத்திடும் சிறியனேன் தன்னைப் 
பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் 

பவளமா நிறத்தகற் பகமே   
1097
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் 

கல்விகற் றுழன்றனன் கருணை 
சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் 

சூகரம் எனமலம் துய்த்தேன் 
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் 

வீணனேன் விரகிலா வெறியேன் 
அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை 

ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


சந்நிதி முறையீடு 
திருவொற்றியூரும் திருத்தில்லையும் 

கலி விருத்தம்() 
() வஞ்சி விருத்தம் - தொ வே , சமுக் 
கலி விருத்தம் - தொவே , ஆபா
1098
ஒற்றி மேவிய உத்தம னேமணித் 
தெற்றி மேவிய தில்லையப் பாவிழி 
நெற்றி மேவிய நின்மல னேஉனைப் 
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே    
1099
பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க் 
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன் 
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல் 
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே    
1100
ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய் 
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே 
ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது 
நீதி யேஎனை நீமரு வாததே