1126
நன்று செய்வதற் குடன்படு வாயேல் 

நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம் 
இன்று செய்திநீ நாளைஎன் பாயேல் 

இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே 
ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர் 

உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார் 
அன்று முன்னரே கடந்தனர் அன்றி 

அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே   
1127
அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான் 

அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய் 
ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ 

உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர் 
முன்றில் காத்தனை அவ்வள வேனும் 

முயன்று காத்திலை முன்னவன் கோயில் 
துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு 

தொடங்கு வானவர் தூயமுன் றிலையே    
1128
தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில் 

சொல்லு வாம்அது சொல்லள வன்றால் 
காய மாயமாம் கான்செறிந் துலவும் 

கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல் 
பாய ஆணவப் பகைகெட முருக்கிப் 

பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே 
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா 

காய சோதிகண் டமருதல் அணியே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


சிவானந்தப் பத்து 
திருவொற்றியூரும் திருத்தில்லையும் 

எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
() எழுசீர் - தொவே ,; எண்சீர் - சமுக் ஆபா
1129
இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள் 

எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன் 
கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது 

குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில் 
பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும் 

பேய ருண்மனை நாயென உழைத்தேன் 
செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே    
1130
ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் 

அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார் 
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய 

வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய் 
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல் 

வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ 
செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே 
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே