1151
ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த 

ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க் 
காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
மாணு றக்களங் கறுத்தசெம் மணியே 

வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே 
சேணு றத்தரும் ஒற்றிநா யகமே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1152
யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ 

யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில் 
காது கின்றதென் வஞ்சக நெஞ்சம் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
ஓது மாமறை உபநிட தத்தின் 

உச்சி மேவிய வச்சிர மணியே 
தீது நீக்கிய ஒற்றியந் தேனே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1153
சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத் 

துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ 
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும் 

அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே 
செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1154
இம்மை இன்பமே வீடெனக் கருதி 

ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே 
கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 

முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே 
செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1155
நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும் 

நிற்ப தின்றியே நீசமங் கையர்தம் 
கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற 

அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே 
தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே 

செல்வ மேபர சிவபரம் பொருளே