1156
புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில் 

போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக் 
கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
விலையி லாஉயர் மாணிக்க மணியே 

வேத உச்சியில் விளங்கொளி விளக்கே 
சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1157
தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச் 

சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான் 
கந்த வாதனை இயற்றுகின் றதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த 

இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே 
சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
1158
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர் 

குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும் 
கடிய தாதலின் கசிந்தில தினிஇக் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அடிய னேன்பிழை உளத்திடை நினையேல் 

அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே 
செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே 

செல்வ மேபர சிவபரம் பொருளே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திருவண்ண விண்ணப்பம்
திருவொற்றியூர் 

கொச்சகக் கலிப்பா
1159
கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன் 
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை 
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள 
எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ    
1160
மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர் 
உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே 
நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால் 
பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ