1211
புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும் 
திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள் 
அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக் 
கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே    
1212
கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை 
விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும் 
உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக் 
கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திருக்காட்சிக் கிரங்கல் 
திருவொற்றியூர் 

தரவு கொச்சகக் கலிப்பா 
1213
மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் 
புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் 
பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு 
கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே    
1214
மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால் 
இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் 
தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின் 
அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே    
1215
வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன் 
பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த 
நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த 
அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே