1221
பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன் 
கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத 
முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு 
வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே    
1222
நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன் 
சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல் 
பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர் 
வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திரு அருட் கிரங்கல் 
திருவொற்றியூர் 

கொச்சகக் கலிப்பா 
1223
ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என் 
அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும் 
தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற 
இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ    
1224
எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம் 
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் 
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பாநீ 
அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ    
1225
பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங் 
குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே 
மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே 
பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ