1231
சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந் 
நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே 
தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால் 
வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ    
1232
கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை 
எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே 
உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற 
மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் 
திருவொற்றியூர் 

எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
() அறுசீர்- தொவே ,; எண்சீர்- சமுக் ஆ பா
1233
வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல் 
வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான் 
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் 
உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய் 
மானை நோக்கிய நோக்குடை மலையாள் 
மகிழ மன்றிடை மாநடம் புரிவோய் 
தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1234
வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல் 
வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம் 
தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன் 
துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய் 
கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக் 
கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே 
தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1235
வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல் 
மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில் 
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் 
பாவி யேன்அருள் பண்புற நினைவாய் 
மித்தை இன்றியே விளங்கிய அடியார் 
விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் 
சித்தி வேண்டிய முனிவரர் பரவித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே