1241
நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல் 
நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த 
பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன் 
புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ 
கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக் 
கமலம் மேவிய விமலவித் தகனே 
செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
1242
நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல் 
நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான் 
பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன் 
பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய் 
கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர் 
களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே 
தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே    
டீயஉம--------------------------------------------------------------------------------


 நெஞ்சு நிலைக் கிரங்கல் 
திருவொற்றியூர் 

கட்டளைக் கலித்துறை 
1243
ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு 
நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம் 
மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல் 
கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே    
1244
ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ 
அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம் 
களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா 
வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே    
1245
மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால் 
ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு 
நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன் 
நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே