1251
குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம் 
சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே 
நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும் 
ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே    
1252
துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண் 
கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின் 
இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே 
பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே    
1253
பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம் 
இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும் 
மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ 
அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 எண்ணத் திரங்கல் 
திருவொற்றியூர் 

கொச்சகக் கலிப்பா 
1254
எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத 
களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா 
வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ் 
அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1255
முன்னேசெய் வௌ;வினைதான் மூண்டதுவோ அல்லதுநான் 
இன்னே பிழைதான் இயற்றியதுண் டோ அறியேன் 
பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை 
அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே