1261
இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமிக 
வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக் 
கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன் 
அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    
1262
மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த 
சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச் 
செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும் 
அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே  

1263
துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை 
வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை 
இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன் 
அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே    

1264
சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு 
விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ 
பரதத் தாண்டவ னேபரி திப்புரி 
வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே    
1265
வேத னேனும்வி லக்குதற் பாலனோ 
தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய 
நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல் 
நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே