1271
நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர் 
சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும் 
ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல் 
வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே    
1272
பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி 
உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப் 
பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது 
நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ    
1273
சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய 
தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு 
உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல் 
நைவ தற்குந ணுகுவ நோய்களே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 நெஞ்சுறுத்த திருநேரிசை 
திருவொற்றியூர் 

நேரிசை வெண்பா 
1274
பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை 
ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய 
அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல 
சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே    
1275
நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால் 
அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத் 
தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச் 
சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று