1351
சேர நெஞ்சமே 
தூரம் அன்றுகாண் 
வாரம் வைத்தியேல் 
சாரும் முத்தியே    
1352
முத்தி வேண்டுமேல் 
பத்தி வேண்டுமால் 
சத்தி யம்இது 
புத்தி நெஞ்சமே    
1353
நெஞ்ச மேஇது 
வஞ்ச மேஅல 
பிஞ்ச கன்பதம் 
தஞ்சம் என்பதே    
1354
என்ப தேற்றவன் 
அன்ப தேற்றுநீ 
வன்பு மாற்றுதி 
இன்பம் ஊற்றவே    
1355
ஊற்றம் உற்றுவெண் 
நீற்றன் ஒற்றியூர் 
போற்ற நீங்குமால் 
ஆற்ற நோய்களே