1366
வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் 
செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக் 
கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத 
எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ   
1367
ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான் 
தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி 
கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர் 
எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1368
துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த 
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப் 
பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த 
என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
1369
முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன் 
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக் 
கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை 
என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திருச்சாதனத் தெய்வத் திறம் 
பொது 

எண்சீர்க்()கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
( ) எழுசீர்- தொவே , எண்சீர்- சமுக, ஆபா 
1370
உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட 
ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ 
அடையாளம் என்னஒளிர் வெண்ணீற் றுக்கும் 
அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ 
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று 
நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும் 
இடையாத கொடுந்தீயால் சுடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்