1381
மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால் 
கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும் 
தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால் 
ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே    
1382
பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் 
சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால் 
ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும் 
ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே    
1383
தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப் 
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக் 
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள 
ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே    
1384
பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும் 
இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர் 
மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர் 
உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 வடிவுடை மாணிக்க மாலை 
காப்பு 
கட்டளைக் கலித்துறை 
1385
சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி 
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத் 
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே 
ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே   
 கட்டளைக் கலித்துறை