1416
சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க 
ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க 
வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த 
வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே    
1417
புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக் 
கரநோக்கி() நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ 
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான் 
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே   
 () கரம்-விடம் தொவே  
1418
உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் 
துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை 
என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் 
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே    
1419
வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் 
உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் 
தௌ;ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத 
வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே    
1420
மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் 
றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே 
காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும் 
வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே