1426
போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய் 
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே 
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர் 
மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே     
1427
ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள் 
பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் 
தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே 
மாசையுள்() ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே    
 () மாசை -பொன் தொவே  
1428
அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் 
பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம் 
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் 
வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே    
1429
அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற 
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் 
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் 
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே    
1430
ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில் 
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ 
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி 
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே