1486
வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் 
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் 
வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ 
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 தனித் திருமாலை 
கட்டளைக் கலித்துறை
1487
வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால் 
என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும் 
தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர் 
பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே    
 நேரிசை வெண்பா
 
1488
மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர் 
கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர் 
ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம் 
சார்ந்துவலம் செய்கால்கள் தாம்   
 குறள் வெண் செந்துறை()
 
1489
சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே 
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே   
 () வஞ்சி விருத்தம்- ஆபா 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
 
1490
படியே அளந்த மாலவனும் 

பழைய மறைசொற் பண்ணவனும் 
முடியீ றறியா முதற்பொருளே 

மொழியும் ஒற்றி நகர்க்கிறையே 
அடியார் களுக்கே இரங்கிமுனம் 

அடுத்த சுரநோய் தடுத்ததுபோல் 
படிமீ தடியேற் குறுபிணிபோம் 

படிநீ கடைக்கண் பார்த்தருளே    
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்