1496
தென்னார் சோலைத் திருஒற்றித் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் 

புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன் 
மின்னார் பலர்க்கும் முன்னாக 

மேவி அவன்றன் எழில்வேட்டு 
என்னார் அணங்கே என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே    
1497
சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் 

தியாகப் பெருமான் பவனிஇராக் 
காலத் தடைந்து கண்டேன்என் 

கண்கள் இரண்டோ ஆயிரமோ 
ஞாலத் தவர்கள் அலர்தூற்ற 

நற்றூ சிடையில் நழுவிவிழ 
ஏலக் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே    
1498
சேயை அருளுந் திருஒற்றித் 

தியாகப் பெருமான் வீதிதனில் 
தூய பவனி வரக்கண்டேன் 

சூழ்ந்த மகளிர் தமைக்காணேன் 
தாயை மறந்தேன் அன்றியும்என் 

தனையும் மறந்தேன் தனிப்பட்டேன் 
ஏயென் தோழி என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே   
1499
திங்கள் உலவும் பொழில்ஒற்றித் 

தியாகப் பெருமான் திருவீதி 
அங்கண் களிக்கப் பவனிவந்தான் 

அதுபோய்க் கண்டேன் தாயரெலாம் 
தங்கள் குலத்துக் கடாதென்றார் 

தம்மை விடுத்தேன் தனியாகி 
எங்கண் அனையாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே   
1500
தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரக் 
கூசா தோடிக் கண்டரையில் 

கூறை இழந்தேன் கைவளைகள் 
வீசா நின்றேன் தாயரெலாம் 

வீட்டுக் கடங்காப் பெண்எனவே 
ஏசா நிற்க என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே