1501
தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரத் 
தோடார் பணைத்தோட் பெண்களொடும் 

சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி 
வாடாக் காதல் கொண்டறியேன் 

வளையும் துகிலும் சோர்ந்ததுடன் 
ஏடார் கோதை என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே    
1502
திருமாற் கரியான் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பெருமான் மனமு நானும்முன்னும் 

பின்னும் சென்று கண்டேமால் 
பொருமா நின்றேன் தாயரெலாம் 

போஎன் றீர்க்கப் போதுகிலேன் 
இருண்மாண் குழலாய் என்னடிநான் 

இச்சைமயமாய் நின்றதுவே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 நாரையும் கிளியும் நாட்டுறு தூது
தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல் -- திருவொற்றியூர் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1503
கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் 

காணக் கிடையாக் கழலுடையார் 
நண்ணும் ஒற்றி நகரார்க்கு 

நாராய் சென்று நவிற்றாயோ 
அண்ணல் உமது பவனிகண்ட 

அன்று முதலாய் இன்றளவும் 
உண்ணும் உணவோ டுறக்கமுநீத் 

துற்றாள் என்றிவ் வொருமொழியே    
1504
மன்னுங் கருணை வழிவிழியார் 

மதுர மொழியார் ஒற்றிநகர்த் 
துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
மின்னுந் தேவர் திருமுடிமேல் 

விளங்குஞ் சடையைக் கண்டவள்தன் 
பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் 

பேசாள் எம்மைப் பிரிந்தென்றே    
1505
வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன 

வசனம் புகல்வார் ஒற்றிதனில் 
நடிக்குந் தியாகர் திருமுன்போய் 

நாராய் நின்று நவிற்றாயோ 
பிடிக்குங் கிடையா நடைஉடைய 

பெண்க ளெல்லாம் பிச்சிஎன 
நொடிக்கும் படிக்கு மிகுங்காம 

நோயால் வருந்தி நோவதுவே