1511
மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் 

வான மகளிர் மங்கலப்பொன் 
நாண்காத் தளித்தார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றுதியோ 
பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் 

புரண்டாள் அயன்மால் ஆதியராம் 
சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் 

தேறாள் மனது திறன்என்றே    
1512
தேசு பூத்த வடிவழகர் 

திருவாழ் ஒற்றித் தேவர்புலித் 
தூசு பூத்த கீளுடையார் 

சுகங்காள் அவர்முன் சொல்லீரோ 
மாசு பூத்த மணிபோல 

வருந்தா நின்றாள் மங்கையர்வாய் 
ஏசு பூத்த அலர்க்கொடியாய் 

இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 இரங்கன் மாலை
தலைவி இரங்கல் -- திருவொற்றியூர் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1513
நன்று புரிவார் திருவொற்றி 
நாதர் எனது நாயகனார் 
மன்றுள் அமர்வார் மால்விடைமேல் 

வருவார் அவரை மாலையிட்ட 
அன்று முதலாய் இன்றளவும் 

அந்தோ சற்றும் அணைந்தறியேன் 
குன்று நிகர்பூண் முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1514
தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் 

தரியார் புரங்கள் தழலாக்க 
நகைசேர்ந் தவரை மாலையிட்ட 

நாளே முதல்இந் நாள்அளவும் 
பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் 

பதப்பூச் சூடப் பார்த்தறியேன் 
குகைசேர் இருட்பூங் குழலாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1515
தோடார் குழையார் ஒற்றியினார் 

தூயர்க் கலது சுகம்அருள 
நாடார் அவர்க்கு மாலையிட்ட 

நாளே முதல்இந் நாள்அளவும் 
சூடா மலர்போல் இருந்ததல்லால் 

சுகமோர் அணுவுந் துய்த்தறியேன் 
கோடா ஒல்குங் கொடியேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே