1526
கஞ்சன் அறியார் ஒற்றியினார் 

கண்மூன் றுடையார் கனவினிலும் 
வஞ்சம் அறியார் என்றனக்கு 

மாலைஇட்ட தொன்றல்லால் 
மஞ்சம் அதனில் என்னோடு 

மருவி இருக்க நான்அறியேன் 
கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1527
ஆலம் இருந்த களத்தழகர் 

அணிசேர் ஒற்றி ஆலயத்தார் 
சால எனக்கு மாலையிட்ட 

தன்மை ஒன்றே அல்லாது 
கால நிரம்ப அவர்புயத்தைக் 

கட்டி அணைந்த தில்லையடி 
கோல மதிவாண் முகத்தாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1528
நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் 

நிருத்தம் பயில்வார் மால்அயனும் 
எய்தற் கரியார் மாலையிட்டார் 

எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால் 
உய்தற் கடியேன் மனையின்கண் 

ஒருநா ளேனும் உற்றறியார் 
கொய்தற் கரிதாங் கொடியேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1529
போர்க்கும் உரியார் மால்பிரமன் 

போகி முதலாம் புங்கவர்கள் 
யார்க்கும் அரியார் எனக்கெளியர் 

ஆகி என்னை மாலையிட்டார் 
ஈர்க்கும் புகுதா முலைமதத்தை 

இன்னுந் தவிர்த்தார் அல்லரடி 
கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1530
இறையார் ஒற்றி யூரினிடை 

இருந்தார் இனியார் என்கணவர் 
மறையார் எனக்கு மாலையிட்டார் 

மருவார் என்னை வஞ்சனையோ 
பொறையார் இரக்கம் மிகவுடையார் 

பொய்ஒன் றுரையார் பொய்யலடி 
குறையா மதிவாண் முகத்தாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே