1531
உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் 

ஊரார் என்னை உடையவனார் 
மடுப்பார் இன்ப மாலையிட்டார் 

மருவார் எனது பிழைஉரைத்துக் 
கெடுப்பார் இல்லை என்சொலினும் 

கேளார் எனது கேள்வர்அவர் 
கொடுப்பார் என்றோ மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1532
எருதில் வருவார் ஒற்றியுளார் 

என்நா யகனார் எனக்கினியார் 
வருதி எனவே மாலையிட்டார் 

வந்தால் ஒன்றும் வாய்திறவார் 
கருதி அவர்தங் கட்டளையைக் 

கடந்து நடந்தேன் அல்லவடி 
குருகுண் கரத்தாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே    
1533
மாவென் றுரித்தார் மாலையிட்ட 

மணாளர் என்றே வந்தடைந்தால் 
வாவென் றுரையார் போஎன்னார் 

மௌனஞ் சாதித் திருந்தனர்காண் 
ஆவென் றலறிக் கண்ணீர்விட் 

டழுதால் துயரம் ஆறுமடி 
கோவென் றிருவேல் கொண்டாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1534
நாட்டும் புகழார் திருஒற்றி 

நகர்வாழ் சிவனார் நன்மையெலாம் 
காட்டும் படிக்கு மாலையிட்ட 

கணவர் எனஓர் காசளவில் 
கேட்டும் அறியேன் தந்தறியார் 

கேட்டால் என்ன விளையுமடி 
கோட்டு மணிப்பூண் முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே   
1535
வெற்பை வளைத்தார் திருஒற்றி 

மேவி அமர்ந்தார் அவர்எனது 
கற்பை அழித்தார் மாலையிட்டுக் 

கணவர் ஆனார் என்பதல்லால் 
சிற்ப மணிமே டையில்என்னைச் 

சேர்ந்தார் என்ப தில்லையடி 
கொற்பை அரவின் இடையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே