1551
கண்ணார் நுதலார் மணிகண்டர் 

கனக வரையாங் கனசிலையார் 
பெண்ணார் பாகர் தியாகர்எனப் 

பேசும் அருமைப் பெருமானார் 
தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் 

சார்ந்தார் பவனி என்றனர்நான் 
நண்ணா முன்னம் என்மனந்தான் 

நாடி அவர்முன் சென்றதுவே    
1552
ஈமப் புறங்காட் டெரியாடும் 

எழிலார் தில்லை இனிதமர்வார் 
சேமப் புலவர் தொழும்ஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
வாமப் பாவை யொடும்பவனி 

வந்தார் என்றார் அதுகாண்பான் 
காமப் பறவை போல்என்மனம் 

கடுகி அவர்முன் சென்றதுவே    
1553
சூலப் படையார் பூதங்கள் 

சுற்றும் படையார் துதிப்பவர்தம் 
சீலப் பதியார் திருஒற்றித் 

திகழுந் தியாகப் பெருமானார் 
நீலக் களத்தார் திருப்பவனி 

நேர்ந்தார் என்றார் அதுகாண்பான் 
சாலப் பசித்தார் போல்மனந்தான் 

தாவி அவர்முன் சென்றதுவே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 சல்லாப வியன்மொழி
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1554
காது நடந்த கண்மடவாள் 

கடிமா மனைக்குக் கால்வருந்தத் 
தூது நடந்த பெரியவர்சிற் 

சுகத்தா ரொற்றித் தொன்னகரார் 
வாது நடந்தான் செய்கின்றோர் 

மாது நடந்து வாவென்றார் 
போது நடந்த தென்றேனெப் 

போது நடந்த தென்றாரே    
1555
கச்சை யிடுவார் படவரவைக் 

கண்மூன் றுடையார் வாமத்திற் 
பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் 

பரிந்தென் மனையிற் பலிக்குற்றார் 
இச்சை யிடுவா ருண்டியென்றா 

ருண்டே னென்றே னெனக்கின்று 
பிச்சை யிடுவா யென்றார்நான் 

பிச்சை யடுவே னென்றேனே