1561
விடையார் கொடிமே லுயர்த்தருளும் 

வேத கீதப் பெருமானார் 
உடையா ரொற்றி யூரமர்ந்தா 

ருவந்தென் மனையி லின்றடைந்தார் 
இடையா வைய மென்றார்நா 

னிடைதா னைய மென்றேனாற் 
கடையா ரளியா ரென்றார்கட் 

கடையா ரளியா ரென்றேனே    
1562
நாடொன் றியசீர்த் திருவொற்றி 

நகரத் தமர்ந்த நாயகனார் 
ஈடொன் றில்லா ரென்மனையுற் 

றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட 
மாடொன் றெங்கே யென்றேனுன் 

மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண் 
காடொன் றுடையீ ரென்றேன்செங் 

காடொன் றுடையே னென்றாரே    
1563
சொல்லா லியன்ற தொடைபுனைவார் 

தூயா ரொற்றித் தொன்னகரார் 
அல்லா லியன்ற மனத்தார்பா 

லணுகா ரென்றென் மனைபுகுந்தார் 
வல்லா லியன்ற முலையென்றார் 

வல்லார் நீரென் றேனுன்சொற் 
கல்லா லியன்ற தென்றார்முன் 

கல்லா லியன்ற தென்றேனே    
டீயஉம

--------------------------------------------------------------------------------


 இன்பக் கிளவி 
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1564
தில்லை வளத்தார் அம்பலத்தார் 

திருவேட் களத்தார் செவ்வணத்தார் 
கல்லை வளைத்தார் என்றன்மனக் 

கல்லைக் குழைத்தார் கங்கணத்தால் 
எல்லை வளைத்தார் தியாகர்தமை 

எழிலார் ஒற்றி எனும்நகரில் 
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் 

ஒன்றும் உரையா திருந்தாரே   
1565
இருந்தார் திருவா ரூரகத்தில் 

எண்ணாக் கொடியார் இதயத்தில் 
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் 

புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண் 
விருந்தார் திருந்தார் புரமுன்தீ 

விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார் 
தருந்தார் காம மருந்தார்இத் 

தரணி இடத்தே தருவாரே