1571
சடையில் தரித்தார் ஒருத்திதனைத் 

தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப் 
புடையில் தரித்தார் மகளேநீ 

போனால் எங்கே தரிப்பாரோ 
கடையில் தரித்த விடம்அதனைக் 

களத்தில் தரித்தார் கரித்தோலை 
இடையில் தரித்தார் ஒற்றியூர் 

இருந்தார் இருந்தார் என்னுளத்தே    
1572
உளத்தே இருந்தார் திருஒற்றி 

யூரில் இருந்தார் உவர்விடத்தைக் 
களத்தே வதிந்தார் அவர்என்றன் 

கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம் 
இளத்தே மொழியாய் ஆதலினால் 

இமையேன் இமைத்தல் இயல்பன்றே 
வளத்தே மனத்தும் புகுகின்றார் 

வருந்தேன் சற்றும் வருந்தேனே   
1573
வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் 

வளஞ்சேர் ஒற்றி மன்னவனார் 
தருந்தேன் அமுதம் உண்டென்றும் 

சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந் 
திருந்தேன் மணாளர் எனைப்பிரியார்

என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம் 
மருந்தேன் மையற் பெருநோயை 

மறந்தேன் அவரை மறந்திலனே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


 இன்பப் புகழ்ச்சி 
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1574
மாடொன் றுடையார் உணவின்றி 

மண்ணுன் டதுகாண் மலரோன்றன் 
ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார்

ஊரை மகிழ்வோ டுவந்தாலங் 
காடொன் றுடையார் கண்டமட்டுங் 

கறுத்தார் பூத கணத்தோடும் 
ஈடொன் றுடையார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே    
1575
பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் 

பேயோ டாடிப் பவுரிகொண்டார் 
பத்தர் தமக்குப் பணிசெய்வார் 

பணியே பணியாப் பரிவுற்றார் 
சித்தர் திருவாழ் ஒற்றியினார் 

தியாகர் என்றுன் கலைகவர்ந்த 
எத்தர் அன்றோ மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே