1581
தங்கு மருப்பார் கண்மணியைத் 

தரிப்பார் என்பின் தார்புனைவார் 
துங்கும் அருட்கார் முகில்அனையார் 

சொல்லும் நமது சொற்கேட்டே 
இங்கும் இருப்பார் அங்கிருப்பார் 

எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே 
எங்கும் இருப்பார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே   
1582
துத்திப் படத்தார் சடைத்தலையார் 

தொலையாப் பலிதேர் தொன்மையினார் 
முத்திக் குடையார் மண்எடுப்பார் 

மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம் 
புத்திக் குரிய பத்தர்கள்தம் 

பொருளை உடலை யாவையுமே 
எத்திப் பறிப்பார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே  
1583
மாறித் திரிவார் மனம்அடையார் 

வணங்கும் அடியார் மனந்தோறும் 
வீறித் திரிவார் வெறுவெளியின் 

மேவா நிற்பார் விறகுவிலை 
கூறித் திரிவார் குதிரையின்மேற் 

கொள்வார் பசுவிற் கோல்வளையோ 
டேறித் திரிவார் மகளேநீ 

ஏதுக் கவரை விழைந்தனையே  
டீயஉம

--------------------------------------------------------------------------------


 திரு உலாத் திறம்
திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1584
தேனார் கமலத் தடஞ்சூழும் 

திருவாழ் ஒற்றித் தியாகர்அவர் 
வானார் அமரர் முனிவர்தொழ 

மண்ணோர் வணங்க வரும்பவனி 
தானார் வங்கொண் டகமலரத் 

தாழ்ந்து சூழ்ந்து கண்டலது 
கானார் அலங்கற் பெண்ணேநான் 

கண்கள் உறக்கங் கொள்ளேனே    
1585
திருமால் வணங்கும் ஒற்றிநகர் 

செழிக்கும் செல்வத் தியாகர்அவர் 
கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் 

கண்டு களிக்க வரும்பவனி 
மருமாண் புடைய மனமகிழ்ந்து 

மலர்க்கை கூப்பிக் கண்டலது 
பெருமான் வடுக்கண் பெண்ணேநான் 

பெற்றா ளோடும் பேசேனே