1591
தென்னஞ் சோலை வளர்ஒற்றி 

யூர்வாழ் செல்வத் தியாகர்அவர் 
பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் 

பிறங்கா நிற்க வரும்பவனி 
மன்னுங் கரங்கள் தலைகுவித்து 

வணங்கி வாழ்த்திக் கண்டலது 
துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் 

சோறெள் ளளவும் உண்ணேனே   
1592
சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி 

யூர்வாழ் செல்வத் தியாகர்அவர் 
வந்தார் கண்டார் அவர்மனத்தை 

வாங்கிப் போக வரும்பவனி 
நந்தா மகிழ்வு தலைசிறப்ப 

நாடி ஓடிக் கண்டலது 
பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் 

பாடல் ஆடல் பயிலேனே    
1593
செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் 

சேருஞ் செல்வத் தியாகர்அவர் 
மிக்கற் புதவாண் முகத்தினகை 

விளங்க விரும்பி வரும்பவனி 
மக்கட் பிறவி எடுத்தபயன் 

வசிக்க வணங்கிக் கண்டலது 
நக்கற் கியைந்த பெண்ணேநான் 

ஞாலத் தெவையும் நயவேனே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


 வியப்பு மொழி
நற்றாய் நயத்தல் - திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1594
மாதர் மணியே மகளேநீ 

வாய்த்த தவந்தான் யாதறியேன் 
வேதர் அனந்தர் மால்அனந்தர் 

மேவி வணங்கக் காண்பரியார் 
நாதர் நடன நாயகனார் 

நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர் 
கோதர் அறியாத் தியாகர்தமைக் 

கூடி உடலம் குளிர்ந்தனையே    
1595
திருவில் தோன்றும் மகளேநீ 

செய்த தவந்தான் யார்அறிவார் 
மருவில் தோன்றும் கொன்றையந்தார் 

மார்பர் ஒற்றி மாநகரார் 
கருவில் தோன்றும் எங்கள்உயிர் 

காக்க நினைத்த கருணையினார் 
குருவிற் றோன்றும் தியாகர்தமைக் 

கூடி உடலம் குளிர்ந்தனையே