1641
கமலன் திருமால் ஆதியர்கள் 

கனவி னிடத்துங் காண்பரியார் 
விமலர் திருவாழ் ஒற்றியிடை 

மேவும் பெருமை வித்தகனார் 
அமலர் அவர்தாம் என்மனைக்கின் 

றணைகு வாரோ அணையாரோ 
தமல மகன்ற குறப்பாவாய் 

தனித்தோர் குறிதான் சாற்றுவையே    
1642
வன்னி இதழி மலர்ச்சடையார் 

வன்னி எனஓர் வடிவுடையார் 
உன்னி உருகும் அவர்க்கெளியார் 

ஒற்றி நகர்வாழ் உத்தமனார் 
கன்னி அழித்தார் தமைநானுங் 

கலப்பேன் கொல்லோ கலவேனோ 
துன்னி மலைவாழ் குறமடவாய் 

துணிந்தோர் குறிநீ சொல்லுவையே   
1643
கற்றைச் சடைமேல் கங்கைதனைக் 

கலந்தார் கொன்றைக் கண்ணியினார் 
பொற்றைப் பெருவிற் படைஉடையார் 

பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார் 
இற்றைக் கடியேன் பள்ளியறைக் 

கெய்து வாரோ எய்தாரோ 
சுற்றுங் கருங்கட் குறமடவாய் 

சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே    
1644
அரவக் கழலார் கருங்களத்தார் 

அஞ்சைக் களத்தார் அரிபிரமர் 
பரவப் படுவார் திருஒற்றிப் 

பதியில் அமர்ந்தார் பாசுபதர் 
இரவு வருமுன் வருவாரோ 

என்னை அணைதற் கிசைவாரோ 
குரவ மணக்குங் குறமடவாய் 

குறிநீ ஒன்று கூறுவையே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


 காட்சி அற்புதம் 

தலைவி இரங்கல்() 
( ) இரங்கல்: தொவெ, சமுக, ஆபா 
திருவொற்றியூர் 


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1645
பூணா அணிபூண் புயமுடையார் 

பொன்னம் பலத்தார் பொங்குவிடம் 
ஊணா உவந்தார் திருஒற்றி 

யூர்வாழ் வுடையார் உண்மைசொலி 
நீணால் இருந்தார் அவர்இங்கே 

நின்றார் மீட்டும் நின்றிடவே 
காணா தயர்ந்தேன் என்னடிநான் 

கனவோ நனவோ கண்டதுவே