1671
சொல்லுள் நிறைந்த பொருளானார் 

துய்யர் உளத்தே துன்னிநின்றார் 
மல்லல் வயற்சூழ் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
கல்லும் மரமும் ஆனந்தக் 
கண்ணீர் கொண்டு கண்டதெனில் 

எல்லை யில்லா அவரழகை 
என்னென் றுரைப்ப தேந்திழையே   
1672
நீர்க்கும் மதிக்கும் நிலையாக 

நீண்ட சடையார் நின்றுநறா 

ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 

பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் 
பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும் 
யார்க்கும் அடங்கா அவரழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே  
1673
கலக அமணக் கைதவரைக் 

கழுவி லேற்றுங் கழுமலத்தோன் 
வலகை குவித்துப் பாடும்ஒற்றி 

வாணர் பவனி வரக்கண்டேன் 
உலக நிகழ்வைக் காணேன்என் 

உள்ளம் ஒன்றே அறியுமடி 
இலகும் அவர்தந் திருஅழகை 

என்னென் றுரைப்ப தேந்திழையே   
1674
கண்ணன் அறியாக் கழற்பதத்தார் 

கண்ணார் நெற்றிக் கடவுள்அருள் 

வண்ணம் உடையார் திருஒற்றி 
வாணர் பவனி வரக்கண்டேன் 

நண்ண இமையார் எனஇமையா 
நாட்டம் அடைந்து நின்றனடி 

எண்ண முடியா அவரழகை 
என்னென் றுரைப்ப தேந்திழையே   
1675
மாழை மணித்தோள் எட்டுடையார் 

மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார் 

வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் 
வாணர் பவனி வரக்கண்டேன் 

யாழை மலைக்கும் மொழிமடவார் 
யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார் 

ஏழை யேன்நான் அவரழகை 
என்னென் றுரைப்ப தேந்திழையே   
டீயஉம

--------------------------------------------------------------------------------


சோதிடம் நாடல் 
தலைவி கழிமிகு காதல் 
 மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று 
திருவொற்றியூர் 


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்