1706
கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும் 
சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும் 
மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும் 
காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
1707
உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும் 
அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் 
படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும் 
கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே    
டீயஉம


--------------------------------------------------------------------------------


 ஆற்றா விரகம் 
தோழியொடு கூறல் --- திருவொற்றியூர் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1708
ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால் 
மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான் 
நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல் 
ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1709
காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார் 
போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல் 
சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி 
ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ    
1710
பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என் 
கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர் 
நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள 
எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ